:-"புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு" தமிழகம் முழுவதும் உயர் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்த கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்டத்தின் 41வது ஆட்சியராக ஜூன் 17-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``பெண்ணுரிமைப் போராளி, மாமேதை, சமூகப் போராளி, முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தமிழக முதல்வர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சித் தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி செயல்பட உள்ளேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அவற்றை மேம்படுத்துதல், மகளிர் கல்வி, வேலைவாய்ப்புகள், வேளாண்மைத்துறை ஆகியற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். அருங்காட்சியக இயக்குநராக நான் பணியாற்றிய போது, புதுக்கோட்டை அரசு அர...
Comments
Post a Comment